மோட்டார் நியூஸ்

உலகின் பவர்ஃபுல் 4 சீட்டர் கார்!

னது கான்டினென்ட்டல் GT காரை அடிப்படையாகக்கொண்டு, கான்டி னென்ட்டல் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரைத் தயாரித்திருக்கிறது பென்ட்லி. உலகின் வேகமான 4 சீட்டர் கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் கார்கள் இவைதான். இதில் இருப்பது, 710bhp பவரையும் - 101.7kgm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 6.0 லிட்டர் W12 டர்போ பெட்ரோல் இன்ஜின். பழைய சூப்பர் ஸ்போர்ட்ஸ் மாடலுடன் ஒப்பிடும்போது, இது 80bhp பவர் மற்றும் 21.7kgm டார்க்கை அதிகமாகக் கொண்டிருக்கின்றன. ‘அதிகரிக்கப்பட்ட பெர்ஃபாமென்ஸுக்கு ஈடு கொடுக்கும்படி, காரின் கையாளுமையிலும் முன்னேற்றம் இருக்கும் என்கிறது’ பென்ட்லி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick