சென்னையில் டிஸைன் பயிலரங்கம்!

கல்வி - டிஸைன் பயிற்சிகா.பாலமுருகன் - படங்கள்: மா.பி.சித்தார்த்

சென்னைக்கு இது புதுசு. ஆம், டிஸைன் சார்ந்த படிப்பு, பயிற்சி, கருத்தரங்கம் என எது நடந்தாலும் அது பெங்களூரு, புனே, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்தான் இதுவரை நடந்துகொண்டிருந்தன. முதன்முறையாக தமிழகத்தில், சென்னையில் நடத்த முன்வந்தது SIAM (Society of Indian Automobile Manufacturers) அமைப்பு.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் களின் கூட்டமைப்பான SIAM, கல்வி புலத்தில் ஆட்டோமொபைல் சார்ந்த பல்வேறு பயிற்சிகள், கருத்தரங்குகளை நாடெங்கும் உள்ள கல்வி வளாகங்களில் நடத்திவருகிறது. அதில், டிஸைன் சார்ந்த பயிற்சி வகுப்பும் ஒன்று. கடந்த ஜனவரி 21 அன்று, சென்னை வண்டலூர் அருகே உள்ள ஐ.ஐ.ஐ.டி & எம் - காஞ்சிபுரம் (Indian Institute of Information Technology, Design & Manufacturing -
Kancheepuram) உயர் கல்வி வளாகத்தில், அப்படிப்பட்ட டிஸைன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மோட்டார் விகடன்தான் மீடியா பாட்னர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick