உயிரைக் காத்த பிரேக்! | Readers Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

உயிரைக் காத்த பிரேக்!

ரீடர்ஸ் ரெவ்யூ - ஹோண்டா ஷைன் SPதமிழ் - படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார்

‘‘ஹாய்... நான் கீர்த்தி ராஜன். மதுரையில் வேலை பார்க்கிறேன். ஷைன் பைக் வந்தபிறகுதான் என் வாழ்க்கை ஷைன் ஆகியிருக்கிறது. காரணம், இதுதான் என்னுடைய முதல் பைக். எல்லோருக்கும் முதல் பைக் மீது அளவு கடந்த பிரியம் இருக்கும். எனக்கும் அதேபோல்தான். ஆனால், அதையும் தாண்டி ஷைன் பைக் என்னைக் கவர்வதற்கு ஏகப்பட்ட காரணங்கள். அதை நான் பைக் வாங்கி ஓட்டிய பிறகுதான் அனுபவிக்கிறேன். முதலில் யமஹா FZ-தான் ஐடியாவில் இருந்தது. பட்ஜெட் எகிறிவிட, ஹோண்டா பக்கம் வந்தேன். நண்பர்கள்தான் ஷைனைப் பற்றி சொன்னார்கள். பைக்கை புக் செய்த அதே நாளில், ஹரிதா மோட்டார்ஸ் எனக்கு டெலிவரி கொடுத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick