தட்டுங்கள் தானாகத் திறக்கும்!

ஃபர்ஸ்ட் லுக் - மினி கிளப்மேன்வேல்ஸ்

ம் நாட்டில் விற்பனையில் இருக்கும் மினி 3 டோர், மினி 5 டோர், மினி கன்வெர்ட்டிபிள், மினி கன்ட்ரிமேன் ஆகிய மினி கார்களோடு, மினி கிளப்மேன் இப்போது புதிதாகச் சேர்ந்திருக்கிறது.  மினியின் டிஸைன் மொழியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் மினி கிளப்மேனின் நீளமான ரூப்-லைன், செங்குத்தான பின்பக்கம், பக்க வாட்டில் இரண்டு பக்கமும் திறக்கும் டிக்கியின் கதவுகள், வட்ட வடிவ ஹெட் லைட்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ் ஆகியவைதான் முக்கியமான அட்ராக் ஷன்ஸ்.

சுருக்கமாகச் சொன்னால், மினி 5 டோர் கூப்பர் S காரின் நீட்சிதான் இந்த கிளப்மேன். இது, மினி 5 டோரை விட 270 மிமீ நீளம், 90 மிமீ அகலம், 100 மிமீ வீல்பேஸ் அதிகம். அதனால், கேபின் ஸ்பேஸ் மட்டுமல்ல, டிக்கியின் கொள்ளளவும் அதிகமாகி இருக்கிறது. பின்னிருக்கைகளை மடக்கிவிட்டால், 360 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி 1,250 லிட்டராகிவிடுகிறது. காரின் டிஸைனிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick