பீம் பாய்ஸ்!

ஒப்பீடு - ஃபோர்டு எண்டேவர் Vs டொயோட்டா ஃபார்ச்சூனர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஃபார்ச்சூனர் மற்றும் எண்டேவர் போன்ற மெகா சைஸ் எஸ்யூவிகள், ஊருக்கு வெளியே இருக்கும் கரடுமுரடான பாதைகளுக்கான வாகனம் மட்டும் அல்ல; நெடுஞ்சாலைகள் மற்றும் நெரிசல்மிக்க நகரச் சாலைகள் ஆகிய இரண்டிலும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மோசமான ஸ்பீடு பிரேக்கர்கள், கன்னாபின்னா சாலைகள் என இந்த எஸ்யூவிகள், தங்கள் வாழ்நாளில் அதிகபட்ச சவால்களைச் சந்திக்கக் கூடியவை.

பெரிய உறுதியான எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு, ஃபார்ச்சூனர்தான் சாய்ஸாக இருந்து வந்தது. ஆனால் இந்த செக்மென்ட்டை, கடந்த 2003-ல் உருவாக்கியது ஃபோர்டு எண்டேவர்தான். கடந்த 2016-ம் ஆண்டில் புதிய எண்டேவர் மற்றும் ஃபார்ச்சூனர் களமிறங்கிவிட்டன. போட்டியாளர்களைவிட அசத்தலாக இருந்ததுடன், எஸ்யூவி பிரியர்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் இவை பெற்றுவிட்டன. எனவே, இந்த இரண்டில் எது பெஸ்ட் என்பதற்கான தேடல்தான் இந்த ஒப்பீடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick