அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ந்த ஆண்டின் சிறந்த கார் மற்றும் பைக் எது என்பதை தேர்வு செய்வது அத்தனை சுலபமானதாக இல்லை. ‘கார் ஆஃப் தி இயர்’ பட்டத்தை வெற்றிகொள்ள ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, காம்பேக்ட் எஸ்யூவி, லக்ஸூரி என்று எல்லா செக்மென்ட்டுகளில் இருந்தும் பல கார்கள் போட்டி போட்டன. புதிய தொழில்நுட்பம், வேல்யூ ஃபார் மணி, புது டிஸைன், பயனுள்ள கூடுதல் அம்சங்கள், ஓட்டுதல் தரம், இன்ஜின் செயல்பாடு, பயணிகள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு என்று பலவிதமான அளவுகோல்களை வைத்து இந்த ஆண்டு அறிமுகமான அத்தனை கார்களையும் வடிகட்டினோம். இறுதிச் சுற்றில் மூன்று கார்கள் வந்து நின்றன. இந்த ஆண்டின் சிறந்த ஹேட்ச்பேக், வேல்யூ ஃபார் மணி, கார் ஆஃப் தி இயர் என ஹாட்ரிக் அடித்தது டாடாவின் டியாகோ.

இந்த ஆண்டுக்கான சிறந்த பைக்கைத் தேர்ந்தெடுப்பதிலும் கடுமையான போட்டி. ‘பைக் ஆஃப் தி இயர்’ விருதுக்கு சிறந்த பெர்ஃபாமென்ஸ் பைக், சிறந்த கம்யூட்டர் பைக் ஆகிய இரண்டு செக்மென்ட்டில் இருந்தும் போட்டி என்றாலும்... கிளாஸிக்கான ஸ்டைல், விக்ராந்த் என்ற போர்க்கப்பலோடு அடையாளப்படுத்திக்கொண்ட உத்தி புத்திசாலித்தனமான விலை என்று சகலவிதங்களிலும் சிக்ஸர் தூக்கி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது பஜாஜ் V15. சென்ற இதழில் 2017-ம் ஆண்டு அறிமுகமாக இருக்கும் கார்களுக்கான முன்னோட்டத்தைக் கொடுத்ததைப்போல இந்த இதழில் 2017-ம் ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறோம். உடனே வாங்கலாமா அல்லது கொஞ்சம் காத்திருந்து வாங்கலாமா என்பதை முடிவுசெய்ய இந்த ட்ரெய்லர் நிச்சயம் உதவும்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick