மோட்டார் நியூஸ்

சீனாவின் பிஎம்டபிள்யூ, இந்தியாவுக்கு!

இந்தியாவில் இப்போது இருப்பது பிஎம்டபிள்யூவின் 1 சீரிஸ் ஹேட்ச்பேக்தான். விரைவில் 1 சீரிஸில் செடானும் வரவிருக்கிறது. முழுக்க முழுக்க சீனாவுக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த 1 சீரிஸ் ‘சைனா ஒன்லி’ செடான், வேறு எந்த நாட்டிலும் வராது என்றார்கள். இப்போதுகூட சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் உயர் அதிகாரியான ஐயன் ராபர்ட்சன், ‘‘இது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்று மழுப்பினாலும், கொஞ்சம் பவர்ஃபுல் இன்ஜினுடன் ஐரோப்பிய மார்க்கெட்டுக்குப் பிறகு, இந்தியாவுக்கு இதைக் கொண்டு வரும் திட்டம், பிஎம்டபிள்யூவிற்கு இருப்பதாகத் தெரிகிறது. அது வரும்போது வரட்டும்; அதற்குள் கார் பற்றி சில டெக்னிக்கல் விஷயங்களைப் பார்த்து விடலாம். செடான் என்பதால், 4 மீட்டருக்கு மேல்தான் இதன் நீளம் இருக்கும். இதன் வீல்பேஸ் 2,670 மி.மீ. இது, பென்ஸ் CLA காரைவிடக் குறைவு; ஆனால், ஆடி A3 காரை விட அதிகம். கிட்னி கிரில், ஸ்ட்ராங் பானெட், முறைக்கும் கண்களை நினைவுபடுத்தும் ஹெட்லைட்டுகள் என்று வெளிப்புறம் நிச்சயம் பிஎம்டபிள்யூவின் மாஸ் இருக்கும். உள்ளே 8.8 இன்ச் டச் ஸ்கிரீனுடன், மற்ற எல்லா பாதுகாப்பு வசதிகளும் இருக்கும். இன்ஜினைப் பொறுத்தவரை அநேகமாக முதலில் 2 லிட்டர் பெட்ரோல்தான். 192 bhp பவர் கொண்ட இது, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இப்போதைக்கு டீசல் இன்ஜின் கிடையாது. இது நம் ஊரில் கிட்டத்தட்ட 45 லட்சத்துக்கு வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick