காம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது? | Compact Sedan car competition - Motor Vikatan | மோட்டார் விகடன்

காம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது?

போட்டி : டிசையர் VS டிகோர் VS எக்ஸென்ட் VS ஏமியோ VS அமேஸ் VS ஆஸ்பயர் தொகுப்பு: தமிழ்

த்திய அரசுக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் என்றால், மத்தியதர வர்க்கத்தினருக்கு பெட்ரோல் கார் வாங்குவதில் குழப்பம். கார் ஆர்வலர்கள் காம்பேக்ட் எஸ்யூவி வாங்கி அடுத்த லெவலுக்கு அப்கிரேட் ஆகிக் கொண்டிருந்தாலும், காம்பேக்ட் செடான்களுக்கு எப்போதுமே மார்க்கெட் இருக்கத்தான் செய்யும். டீசலைவிடக் குறைந்த பராமரிப்புச் செலவு, விலை குறைவு, ரிஃபைன்மென்ட் என்று பல நல்ல விஷயங்கள் பெட்ரோல் காம்பேக்ட் செடான்களுக்கு உண்டு.

‘ஆபிஸ் - வீடு என்று குறைவாகத்தான் கார் ஓட்டுவேன்; பெட்ரோல் செடான் போலாம்னு பார்க்கிறேன்’ என்பவர்களுக்கு மார்க்கெட்டில் எக்கச்சக்க ஆப்ஷன்ஸ். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹூண்டாயிலிருந்து எக்ஸென்ட் ஃபேஸ்லிஃப்ட் வந்தது; அதற்கு முன்பு மாருதியிலிருந்து டிசையர் (கவனிக்க: ஸ்விஃப்ட் டிசையர் இல்லை) வந்தது; அதற்கும் முன்பு டாடாவின் டிகோர் வந்தது.

இது தவிர, ஏற்கெனவே ஃபோர்டின் ஆஸ்பயரும், ஃபோக்ஸ்வாகனின் ஏமியோவும், ஹோண்டாவின் அமேஸும் காம்பேக்ட் செடான் வரிசையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் செடான் பிரியர்களின் மனதையும் அறிவையும் ஒருசேரக் கவரக்கூடிய கார், இந்தப் பட்டியலில் உண்டா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick