ஈர்க்கும் இவோக்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : ரேஞ்ச் ரோவர் இவோக்தொகுப்பு: ராகுல் சிவகுரு

வோக்... சீரியஸான டிசைனைக் கொண்டிருந்த ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிகளுக்கு, ஸ்டைலான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த கார். மேலும், சமீபத்திய லேண்ட் ரோவர் தயாரிப்புகள் மாடர்ன் ஆனதற்கான விதையைப் போட்டதும் இந்த எஸ்யூவிதான்! இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தம் கொண்ட இவோக், கடந்த ஆண்டில் ஒரு ஃபேஸ்லிஃப்ட்டைப் பெற்றது. தற்போது 2017-க்கு, மீண்டும் ஒரு ஃபேஸ்லிஃப்ட்டைப் பெற்றிருக்கிறது.

இதில், மிக முக்கியமான மாற்றம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆம், இதில் ஜாகுவார் XF காரில் முதன்முதலாக அறிமுகமான ‘Ingenium' சீரிஸின் புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கேட்ஜெட் ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த InControl Touch Pro இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இதில் சேர்க்கப்பட்டுவிட்டது. சாட்டிலைட் நேவிகேஷன், அப்ளிகேஷன்களுக்கான கனெக்ட்டிவிட்டி வசதி, அசத்தலான மெனு என ஸ்மார்ட்போன் போல அப்டேட்டாக இருந்தாலும், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார்ப்ளே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick