ரஃப் ரோடு; டஃப் காரு!

டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ்: பிஎம்டபிள்யூ ராஜு முருகேசன் : படங்கள்: க.பாலாஜி

சென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் ‘The Farm’ என்ற உணவு விடுதிக்குப் பின்னால் இருக்கும் சாகச பிரதேசம், இப்போது எஸ்யூவிகளின் அறிவிக்கப்படாத தலைமை கேந்திரமாக மாறியிருக்கிறது.
லேண்ட்ரோவர், ஃபோர்டு வரிசையில் இந்த சாகச பூமியை, தன் வாடிக்கையாளர்களுக்கு விளையாட வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததுடன், தன்னுடைய X1, X3, X5 மற்றும் X6 கார்களின் பராக்கிரமங்களை சோதனை செய்துபார்க்கக் கொடுத்திருந்தது பிஎம்டபிள்யூ. மேடுபள்ளங்களும், குண்டுகுழிகளும் நிறைந்த இந்தப் பிரதேசத்தில், பிஎம்டபிள்யூ X5 காரை ஓட்டிப்பார்க்கும் அனுபவம் கிடைத்தது. இந்த கார்கள் எல்லாமே பொதுவழக்கில் எஸ்யூவி என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், பிஎம்டபிள்யூ இவற்றை SAV அதாவது Sports Activity Vehicle என்றே பெருமையோடு குறிப்பிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick