இது மாடர்ன் ஜீப்!

பழைய கார் : ஹூண்டாய் டூஸான்தமிழ், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

சில கார்கள் மட்டுமே நம் ஆவலைத் தூண்டும். அப்படிப்பட்ட கார்களில் மிட்சுபிஷி பஜேரோ, ஷூண்டாய் டூஸான், டொயோட்டா குவாலிஸ் போன்ற யுட்டிலிட்டி வாகனங்கள் முக்கியமானவை.

ஸ்பேர் பார்ட்ஸ் சிக்கல் மனசுக்குள் வந்தாலும், ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று இந்த வகை கார்கள் மனதை மயக்குபவை. அப்படித்தான் ஹூண்டாய் டூஸானைப் பார்த்ததும் பிடித்துவிட்டது, மதுரையைச் சேர்ந்த சரபுவுக்கு. குறைந்த விலை என்பது இதற்கு முதல் காரணம். விற்பனையில் இருக்கும் எஸ்யூவிகள், பழைய மார்க்கெட்டில் 8 லட்ச ரூபாய்க்குக் குறைவாகக் கிடைக்காது. ஆனால், 5 லட்ச ரூபாய்க்குள் 7 சீட்டர் எஸ்யூவி கிடைக்கிறது என்றால் சும்மாவா?

‘‘என்னோட பட்ஜெட் 4.5 லட்சம். ரொம்பப் பழசா இருந்தாலும் பரவாயில்லை. தார் ஜீப் பார்க்கிறேன். ரொம்ப விலை அதிகமா சொல்றாங்க... 4 வீல் டிரைவ் எஸ்யூவிதான் என் குடும்பத்தோட சாய்ஸ். ஐடியா ப்ளீஸ்?’’ என்று கேட்டிருந்தார் சரபு லியோ.

4 வீல் டிரைவ் என்று பார்த்தால், பழைய கார் மார்க்கெட்டில் கிராண்ட் விட்டாரா, பொலேரோ, தார், டூஸான், பஜேரோ போன்றவைதாம் ஆப்ஷன்ஸ். பொலேரோ, தார், பஜேரோ போன்றவை 5 லட்ச ரூபாய்க்குள் அடங்காது. ‘‘கிராண்ட் விட்டாரா பெட்ரோல் அல்லது டீசல் டூஸான் ஓகேவா?’’ என்றதும், ‘‘டூஸான் ஓகே!’’ என்று தம்ஸ்அப் அனுப்பினார் சரபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick