ஆல் டைம் அருவி! - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : மாருதி இக்னிஸ் (டீ) தமிழ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

ப்பிள் பழம் முதல் ஆப்பிள் போன் வரை எல்லாவற்றுக்குமே சீஸன் உண்டு. ஆனால், இதற்கு விதிவிலக்கு, அகத்தியர் அருவி. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் அருவிக்கு சீஸன் என்பது கிடையாது. ‘கொளுத்தும் வெயிலில் குளிக்கக் குவியும் மக்கள்’ என்று கோடை சீஸனில்கூட அகத்தியர் அருவியைப் பற்றித் தலைப்புச் செய்திகள் வரும். ‘தண்ணி விழுமா’ என்று சந்தேகிக்கத் தேவையில்லை.  அகத்தியர் அருவிக்கு நடையைக்கட்டலாம்.

‘இக்னிஸ் புக் பண்ணப் போறேன். வாங்களேன்... அகத்தியர் அருவியில் குளிச்சுட்டு வரலாம்!’ என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு வாய்ஸ் ஸ்நாப் பண்ணியிருந்தார் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அருண்ராஜா. ‘ஃபர்ஸ்ட் சர்வீஸ் முடிஞ்சிடுச்சு’ என்று மறுபடியும் வாட்ஸ்-அப். ‘2,500 கி.மீ ஓட்டி முடிக்கப்போறேன்’ என்று மீண்டும் அவர் அனுப்பியபோது, தம்ஸ்அப் மெசேஜ் அனுப்பி சங்கரன் கோவிலுக்குக் கிளம்பிவிட்டோம். அங்கு வற்றல் கமிஷன் கடை நடத்திவரும் அருண்ராஜா, கார் பிரியர் இல்லை; கார் வெறியர். ‘‘பெலினோவில் இருந்து TUV, டிகோர் வரை எல்லாமே டெஸ்ட் டிரைவ் பண்ணிட்டேன். இக்னிஸ்தான் பிடிச்சிருந்தது. அதான் எடுத்துட்டேன்’’ என்று கார் வாங்கிய கதையைச் சொல்ல ஆரம்பித்தவர், பயணம் முழுதும் கார்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick