டுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்!

ஃபர்ஸ்ட் லுக் : மான்ஸ்ட்டர் 797தொகுப்பு: ராகுல் சிவகுரு

லகளவில் எவ்வளவு பெரிய பைக் நிறுவனமாக இருந்தாலும், அவர்கள் தமது என்ட்ரி லெவல் பைக்குகளை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அந்த நிறுவனத்தின் வெற்றி அமையும். ஏனெனில் அது சரியாக அமைந்துவிட்டால், ஒரு ரைடர் தனது ஆரம்பகாலம் தொட்டு, பைக்கில் போதிய அனுபவம் பெறும் வரைக்கும், அதே நிறுவனத்தின் தயாரிப்புகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் டுகாட்டி நிறுவனம், அதன் வெளிப்பாடாகக் களமிறக்கியுள்ள பைக்தான் மான்ஸ்டர் 797. மான்ஸ்டர் 795 மற்றும் மான்ஸ்டர் 796 மாடல்களின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டதால், இப்போது டுகாட்டியின் என்ட்ரி லெவல் பைக்காக இருப்பது ஸ்க்ராம்ப்ளர்தான்! அது ஓட்டுவதற்கு அற்புதமான பைக்காக இருந்தாலும், அதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்குமா  என்பது சந்தேகம். எனவேதான் மான்ஸ்டர் 797 பைக்கை, தனது என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்காக பொசிஷன் செய்திருக்கிறது டுகாட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick