இந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்!

பைக் : கிளீவ்லேண்ட்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் இந்த ஆண்டு, புதிதாக ஒரு வெளிநாட்டு பைக் நிறுவனம் கால்பதிக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் கிளீவ்லேண்ட்டைச் சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ், அவ்வளவாகப் பரிச்சயமில்லாத நிறுவனம். ஏனெனில், அமெரிக்காவில் இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, நூற்றாண்டைக் கடந்திருக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்தான் பலரது நினைவுக்கு வரும். எனவே அதனுடன் ஒப்பிடும்போது, வெறும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2009-ல் மூன்று அமெரிக்கர்களால் (Scott Colosimo, Jarrod Streng, Curtis Ray) துவக்கப்பட்ட இந்நிறுவனம், பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கடந்த பிப்ரவரி 2010-ல், ‘The Heist’ எனும் பாப்பர் வகை மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்திய கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ், அடுத்த 7 ஆண்டுகளில் நான்கு புதிய மோட்டார் சைக்கிள்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 நாடுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick