பாகுபலி Vs பல்வாள்தேவன்!

ஒப்பீடு : எண்டேவர் Vs MU-Xதொகுப்பு: ராகுல் சிவகுரு

‘கட்டுமஸ்தான  தோற்றத்தில், உறுதியான எஸ்யூவி ஒன்று வேண்டும்; அது சொகுசான 7 சீட்களுடன் கூடிய பிரீமியம் எஸ்யூவியாக இருப்பது அவசியம்' என்பவர்களுக்கான பெர்பெக்ட் சாய்ஸாக இருப்பது, ஃபோர்டு எண்டேவர்!  கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒப்பீட்டில், டொயோட்டா ஃபார்ச்சூனர், செவர்லே ட்ரெய்ல்பிளேசர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் போன்ற XL சைஸ் எஸ்யூவிகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், மோட்டார் விகடனின் ‘சிறந்த எஸ்யூவி - 2017' விருதையும் வென்றது. ஒரு எஸ்யூவிக்கு அடிப்படையான ஆஃப் ரோடிங் போன்ற விஷயங்களைத் தவிர சொகுசு, தொழில்நுட்பம் போன்ற ஏரியாக்களிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது எண்டேவர். ஆனால், இந்த எஸ்யூவியுடன் இப்போது போட்டியிட வந்திருக்கும் இசுஸூவின் லேட்டஸ்ட்டான MU-X எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, எண்டேவர் சுமார் 7 லட்ச ரூபாய் அதிகம். எண்டேவரில் இருக்கும் ஆஃப் ரோடிங் திறன் மற்றும் பல வசதிகள், தனது MU-X எஸ்யூவியிலும் இருப்பதாக இசுஸூ கூறியுள்ளது. ஆக, ஜெயிப்பது அமெரிக்காவா, ஜப்பானா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்