90 நிமிடத்தில் 90% சார்ஜ்!

டிரைவ் : மஹிந்திரா e2O ப்ளஸ்தமிழ் , படங்கள்: எம்.குமரேசன்

ஹிந்திராவின் பழைய e2O எலெக்ட்ரிக் கார்தான்; இப்போது அப்கிரேட் ஆகி  பளபளப்பாக ‘மஹிந்திரா e2O ப்ளஸ்’ என்ற பெயரில் வந்திருக்கிறது,

பழசு 2-டோர்; இது 4-டோர். பழைய காரில் பின்னால் இட நெருக்கடி இருக்கும்; இதில் நல்ல இடவசதி. மேலும் டச் ஸ்க்ரீன், 135 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் லெக்ரூம், எலெக்ட்ரிக் விங் மிரர்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வாகனத்தின் வேகம், டிரைவ் மோடு விவரம், மைலேஜ், சார்ஜிங் அளவு, டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்ட்டி போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால், உள்ளே பிளாஸ்டிக்குகள் சீப்பான குவாலிட்டியோ என்று நினைக்கவைக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick