ஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்!

ஃபோர்டு எண்டேவர் : ஆஃப் ரோடிங்வேல்ஸ் , படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘நம்முடைய காரின் பராக்கிரமங்களை நாம் சொல்லாவிட்டால், வேறு யார் சொல்வது?' என்பதால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் வேறு வேறு பெயர்களில் ‘அட்வென்ச்சர் டிரைவ்' நடத்துகின்றன. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருப்பது, ஃபோர்டு. சென்னையை அடுத்திருக்கும் சோழிங்கநல்லூரில் ‘கிரேட் எண்டேவர் டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ்' என்ற பெயரில், ஒரு சாகச ஓட்டுதல் அனுபவத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘தி ஃபார்ம்' என்ற பெயரில் அமைந்திருக்கும் தீம் ரெஸ்டாரன்ட்டுக்குப் பின்பக்கம் இருக்கிறது வாகனங்களுக்குச் சவால் விடும் இந்தப் பூமி.

தென்னை மரங்கள் நிறைந்த கரடுமுரடான அந்த நிலத்தில், மேடு பள்ளங்களுக்குக் குறைச்சல் இல்லை. அதேபோல, அங்கு ஒரு பெரிய குட்டையும் உண்டு. இது போதாதென வெளியில் இருந்து கற்குவியல்களையும் உடைந்த பாறைகளையும் கொண்டுவந்து, பல முரட்டு வழித்தடங்களையும் மேடு பள்ளங்களையும் அமைத்திருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick