“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்!” - புது ரேஸர் தேவிஸ்ரீ | Racer girl from Coimbatore - Motor Vikatan | மோட்டார் விகடன்

“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்!” - புது ரேஸர் தேவிஸ்ரீ

தமிழ்மலர் , படங்கள்: சுவாதி

ரு வழியாக, இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கெனத் தனியாக ஒன்-மேக் ரேஸ் நடக்க இருக்கிறது. ஜூன் மாத மத்தியில் நடக்கவிருக்கும் இந்த ஒன்-மேக் ரேஸுக்காகத்தான் இந்தியா முழுவதும் உள்ள பெண் ரேஸர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதுவரை ஒன்-மேக் ரேஸ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகத்தான் நடந்துவந்தன. முதன்முதலாக தனித் தனியாக நடக்க இருப்பதால், ரேஸ் ட்ராக்கில் முன்பைவிட அதிகமாகப் பெண்கள் கூட்டம். பலதரப்பட்ட வயதுகொண்ட பெண்களும் பைக்கை முறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

‘‘அப்பா, எனக்குத்தான் பைக் ஓட்டத் தெரியுமே.. நானும் ரேஸர் ஆகணும்!’’ என்று களத்தில் இறங்கிய பெண்களில் ஒருவர்தான் தேவிஸ்ரீ. கோவையைச் சேர்ந்த 22 வயது தேவிஸ்ரீ, பைக் ரேஸில் கலந்து கொள்வதற்காகவே அப்பாவிடம் அடம்பிடித்து, சென்னையில் தங்கி, பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். தேவிஸ்ரீக்கு பைக் ஓட்டுவதில் 11 ஆண்டுகள் அனுபவம். ‘‘ஆமா... என்னோட 11 வயசில் இருந்து பைக் ஓட்டுறேன். ஆனா, ரேஸுக்கு நான் புதுசு! ஆரம்பத்துல நெர்வஸா இருந்துச்சு... இப்போ எப்படா ரேஸ் ஆரம்பிப்பாங்கன்னு இருக்கு!’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதே ‘வ்வ்ர்ரூம்’ என ட்ராக்கில் ஒரு லேப்பை முடித்துவிட்டு வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick