அதிர்வும் இல்லை; சூடும் இல்லை! | Bajaj Dominar - Readers review - Motor Vikatan | மோட்டார் விகடன்

அதிர்வும் இல்லை; சூடும் இல்லை!

ரீடர்ஸ் ரெவ்யூ : பஜாஜ் டொமினார்ராகுல் சிவகுரு, படங்கள்: தி.குமரகுருபரன்

ஹாய்... என் பெயர் தினேஷ் தேவராஜன். நான் SRM மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகவும் பணிபுரிகிறேன். முதன்முறையாக நான் பைக் ஓட்டியது யமஹாவின் RX 100 மற்றும் சுசூகியின் ஷோகன்தான். கல்லூரியில் சேர்ந்த பிறகு, பல்ஸர் 180 பைக்கை வாங்கினேன். பின்பு, பல்ஸரை மட்டுமே கொண்ட எனது நண்பர்கள் 12 பேரை ஒன்று திரட்டி, ஒரு குழுவாவை உருவாக்கினோம்.

கடந்த 14 ஆண்டுகளாக, இப்போதும் நான் அந்த பைக்கைத்தான் பயன்படுத்தி வருகிறேன். அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி என்ன தெரியுமா? ‘என்ன சார் டாக்டர் ஆகிட்டீங்க,  இன்னும் பைக்கிலேயே போறீங்க; கார் வாங்கலையா?’ என்பதுதான். எனது வீட்டிலும் கார் வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எனக்கோ, பைக்குகள் மீதிருந்த ஈர்ப்பு காரணமாக, கார் மீது பெரிதாக ஆர்வம் எழவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick