கிளாமர் ஃப்ரெண்ட் இக்னிஸ்! | Maruti IGNIS - Readers review - Motor Vikatan | மோட்டார் விகடன்

கிளாமர் ஃப்ரெண்ட் இக்னிஸ்!

ரீடர்ஸ் ரெவ்யூ : மாருதி இக்னிஸ்செ.சங்கீதா, படங்கள்: க.மணிவண்ணன் , க.சுகன்

ஹாய்... நான் வருண். எனக்கு கார் ஓட்டுவது பிடித்தமான விஷயம். இதுவரை எத்தனையோ கார்களை நான் ஓட்டியிருக்கிறேன். ஆனால், மாருதி இக்னிஸ் எனக்கு மிகவும் ஸ்பெஷல். கார் வாங்கியது முதல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஏன் இக்னிஸ்?

நான் நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பதால், கார் நிறுத்துவது கொஞ்சம் சிக்கலான விஷயம். பார்க்கிங்குக்காகவே காம்பேக்ட் கார்தான் என் சாய்ஸாக இருந்தது. இக்னிஸின் அழகான டிசைன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உள்வடிவமைப்பு காம்பேக்ட் ஆகவும், நல்ல லுக்காகவும் இருக்கிறது. போக்குவரத்தில் புகுந்து புறப்பட சின்ன கார்கள்தான் சரியான சாய்ஸ். நான் வாங்கியது, பெட்ரோல் மாடல்; 1.2 கே-சீரிஸ் இன்ஜின். போக்குவரத்தில் சிக்காமல் அலுவலகத்துக்குச் சீக்கிரமாகவே அட்டெண்டென்ஸ்  போட முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick