Accessories

ஆக்சஸரீஸ் : கார்/பைக்

சில கார்களில், USB சார்ஜிங் போர்ட் இருக்காது. ஆனால் மொபைல் சார்ஜிங்குக்கான சாக்கெட், எல்லா கார்களிலும் இருக்கும். லோக்கலாகக் கிடைக்கும் 100 ரூபாய் சார்ஜர்களில், சில நேரங்களில் வோல்ட்டேஜ் டிராப் ஆவதும், எகிறுவதும் நடக்கும். இது உங்கள் போனுக்கும் பவர் சாக்கெட்டுக்கும்தான் ஆபத்து. அப்படியே இருந்தாலும், உங்கள் ஆண்ட்ராய்டு போனையோ, USB-யையோ சார்ஜ் செய்வதற்கு சான்ஸே இல்லை. அப்படிப்பட்ட நேரங்களில், இந்த      CurioCity USB டூயல் சார்ஜரை வாங்கி வைத்துக் கொள்ளுதல் நலம். டூயல் டைப் என்பதால் போன், USB என இரு விஷயங்களுக்கு, ஒரே நேரங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 11.8 V-க்குக் கீழேயோ, 18 V-க்கு மேலேயோ வோல்ட்டேஜ் இறங்கி ஏறினால், அலார்ம் அடித்துத் தானாகவே சார்ஜும் கட் ஆகிவிடும். இதில் LED டிஸ்ப்ளேவும் உண்டு என்பதால், ரிச் லுக்கிலும் இருக்கிறது. அமேஸான் வலைதளத்தில் இதை ஆர்டர் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்