வீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்!

ஏன்? எதற்கு? எப்படி? : வீல் அலைன்மென்ட்தமிழ்

மென்மையான நெடுஞ்சாலை; சாலையில் குண்டு குழியில்லை; மேடு பள்ளம் கொஞ்சம்கூட இல்லை. ஆனால், கார் ஒரு பக்கமாகவே இழுத்துக்கொண்டு போகிறது. பிரேக் பிடித்தாலும் ஏதோ ஒரு பக்கமாகத்தான் தள்ளி நிற்கிறது. இப்படி ஓர் உணர்வு உங்களுக்கு வந்தால், நீங்கள் நினைப்பது மிகச் சரி; அது நிச்சயம் வீல் அலைன்மென்ட் பிரச்னைதான்.

வீல் அலைன்மென்ட் சரியாக இல்லாதபோது, வாகனம் உங்கள் சொல்பேச்சுக் கேட்காது; சரியான பாதையில் செல்ல முரண்டு பிடிக்கும். ‘ஆபத்துதான் இல்லையே; கொஞ்ச நாள் இப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’ என்று அசால்ட்டாக விட்டால்... டயர்கள், ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் போன்ற எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து, இந்த வீல் அலைன்மென்ட் மிகப் பெரிய ஆப்பு வைக்கும். அது மட்டுமல்ல; இது உங்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமும்கூட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick