கேட்ஜெட்ஸ் | Gadgets - Motor Vikatan | மோட்டார் விகடன்

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் கார்த்தி

சாம்ஸங் கேலக்ஸி S8

சாம்ஸங், சோனி, ஆப்பிள், HTC என இருந்த மொபைல் மார்க்கெட்டில், இன்னும் தில்லாக நிற்பது  சாம்ஸங்கும், ஆப்பிளும்தான். அதுவும் பட்ஜெட் மொபைல்களுக்கு டஃப் ஃபைட் கொடுத்துக்கொண்டு இருக்கிறது சாம்ஸங். இதற்கு முன்பு சாம்ஸங் மிக மிக பிரமாண்டமாக வெளியிட்ட சாம்ஸங் நோட் 7 வெடித்துக் கிளம்பியதில், உலகம் முழுவதும்  அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட சேதாரம் மிக அதிகம். ஆண்ட்ராய்டு மொபைல்களில் பெரிய பட்ஜெட் மொபைல் வாங்க, வாடிக்கையாளர்களின் சாய்ஸாக இருந்தது சாம்ஸங் தான். அதை நோட் 7 தகர்த்து எறிந்துவிட்டது என்பதுதான் உண்மை.உலகம் முழுக்க இருக்கும் விமான நிலையங்களில் இன்னமும் நோட் 7 அபாயப் பலகைகள் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அதை ஈடுசெய்ய, அடுத்த மெகா பட்ஜெட் மொபைல்களான சாம்ஸங் கேலக்ஸி S8,S8+ மாடல்களை  வெளியிட்டு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick