ரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்!

தொழில்நுட்பம் : ரைடு பை வொயர்தமிழ்

ட்லி முதல் இன்டர்நெட் வரை இப்போது எல்லாமே எலெக்ட்ரானிக் சிஸ்டத்துக்கு மாறிவிட்டன. அதுவும் ஆட்டோமொபைல் உலகில் பெரும்பான்மையானவை எலெக்ட்ரானிக்ஸ்தான். பவர் ஸ்டீயரிங், பிரேக், பவர் விண்டோஸ், பவர்டு மிரர், பவர்டு சீட்ஸ் என்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில், கார்களில் உள்ள ‘டிரைவ் பை வொயர்’ சிஸ்டத்தின் அடுத்த ஸ்டெப்பாக வந்ததுதான் ‘Ride by Wire’ தொழில்நுட்பம். இது முழுக்க முழுக்க சென்ஸார் சிஸ்டம். ‘ரைடு பை வொயர்’ தொழில்நுட்பத்தை முதன் முதலில் யமஹாதான் தனது YZF-R6 சூப்பர் பைக்கில் கொண்டு வந்தது. ரேஸ் ட்ராக்கில் ஓடும் பெரிய இன்ஜின் கொண்ட சூப்பர் பைக்குகளுக்குத்தான் இந்தத் தொழில்நுட்பம் தேவை என்று விதியாக இருந்ததை மாற்றிவிட்டது, கேடிஎம் நிறுவனம். இதைத் தனது 390 சிசி பைக்குகளின் ஃபேவரைட் தொழில்நுட்பமாக்கி விட்டது. இப்போது கம்யூட்டர்களும் ‘ரைடு பை வொயர்’ மூலம் பைக்கில் ஜாலி ரைடு போக ஆரம்பித்துவிட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick