தானாகப் பிடிக்கும் பிரேக்குகள்!

தொழில்நுட்பம் - ப்ரீ-கொலீஷன் சிஸ்டம்தமிழ்

வனக்குறைவால் விபத்து ஏற்படுத்தியவர்களிடம் கவுன்சலிங் செய்யும்போது, ‘சரியா பார்க்கலை; திடீர்னு க்ராஸ் ஆகிடுச்சு... என்ன பண்றதுன்னே தெரியலை’ என்பதாகத்தான் பெரும்பாலும் அவர்களின் வாக்குமூலம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் திடீரென ஒரு தடை ஏற்படும்போது, என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், ஒரு விநாடி அவகாசத்தில் ஏற்படும் விபத்துகள் மிகக் கொடூரமானவை. கொஞ்சம் ரிலாக்ஸடாக கார் ஓட்டுபவர்கள் என்றால், ‘இப்படிச் செய்தால் தப்பிக்கலாம்’ என்ற ஐடியா ஏற்பட்டாலும், அதைச் செயல்படுத்துவதற்குக் கால அவகாசம் கிடைக்காது. விளைவு - விபத்து.

இந்த மாதிரி நேரங்களில் கார் பயணிகளைக் காக்கப் புறப்பட்ட தொழில்நுட்பம்தான் ‘PCS’ என்னும் ‘ப்ரீ-கொலீஷன் சிஸ்டம்' (Pre-Collision System).

பாதுகாப்பு விஷயங்களில் ABS, EBD, ட்ராக் ஷன் கன்ட்ரோல் என்று என்னதான் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி நடக்கும் விபத்துகளும் உள்ளன. இந்த ப்ரீ-கொலீஷன் சிஸ்டம் என்பது தானாக இயங்கக்கூடிய தொழில்நுட்பம். அதிலும், டிரைவர் என்ன செய்வதென்று தெரியாத பதற்றமான நிலையில், இந்த ப்ரீ-கொலிஸன் சிஸ்டம் வெளிநாடுகளில் பலரது உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. இதற்கு ‘கொலீஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் விபத்துகளில் இருந்து காப்பதற்காகத்தான் இது வடிவமைக்கப்பட்டது.

கார் ஓட்டும்போது வெளியே இருக்கும் விஷயங்கள் கண்களுக்குச் சரியாகத் தெரியாமல், நம் பார்வையில் இருந்து தப்பினால், அதை ‘பிளைண்ட் ஸ்பாட்’ என்கிறோம். சில கார்களில் பெரிய பில்லர்கள், தாழ்வான சீட்கள், இறக்கமான விண்ட் ஷீல்டு போன்றவற்றால், இந்த ‘பிளைண்ட் ஸ்பாட்’ பிரச்னை ஏற்படும். அதையும் தாண்டி இரவு நேரப் பயணங்களில், தடாலென எதிர்ப்படும் மேடு பள்ளங்கள், சரேலென ரோட்டைக் கடக்கும் விலங்குகள் போன்றவை டிரைவர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இதுபோன்ற சமயங்களில் விபத்துகளைத் தவிர்ப்பது சவாலான காரியமாக அமைந்துவிடும். ப்ரீ-கொலீஷன் சிஸ்டம் இங்கு மிகப் பெரிய வரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick