ஹலோ டீசல் பாய்ஸ்... எது உங்கள் சாய்ஸ்?

தொகுப்பு: தமிழ்

போட்டி
மஹிந்திரா KUV100 Vs ஹூண்டாய் கிராண்ட் i10 Vs மாருதி சுஸூகி இக்னிஸ்

மாதந்தோறும் ‘பெஸ்ட் செல்லர்’ பட்டியலில் இடம் பிடித்தாலும், கிராண்ட் i10-ன் தோற்றம் கொஞ்சம் டல் அடித்துவிட்டது. சுதாரித்த ஹூண்டாய், கிராண்ட் i10 காரில் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் கொண்டு வந்துவிட்டது. ஆரம்பித்த நாளிலிருந்து ஹேட்ச்பேக் பக்கமே தலை வைத்துப் படுக்காத மஹிந்திராகூட, கடந்த ஆண்டில் KUV100 காரைக் கொண்டு வந்துவிட்டது. மோனோகாக் பாடி, ஃப்ரன்ட் வீல் டிரைவ் என்று அழகாக இருக்கும் KUV காரை ‘ஹேட்ச்பேக்’ என்று சொல்லாமல் க்ராஸ்ஓவர் எஸ்யூவி என்றே சொல்லி வருகிறது மஹிந்திரா.

மாருதியின் விஷயமே வேறு! ஏற்கெனவே தன்னிடம் ஏராளமான டீசல் ஹேட்ச்பேக் கார்கள் இருந்தாலும், இந்த நேரத்தில் தனது கை இன்னும் ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காக,  மாருதி புதிதாகப் போட்டிருக்கும் ஸ்கெட்ச் - இக்னிஸ். மாருதியின் பிரீமியம் ஷோரூமான நெக்ஸாவில் விற்பனை செய்யப்படுவதால், இதை பிரீமியம் காம்பேக்ட் செக்மென்ட்டில் ப்ளேஸ் செய்திருக்கிறது. ‘ஏதோ ஒண்ணு இருக்கு இந்த கார்ல’ என்று வாடிக்கையாளர்களை ‘அவுட் ஆஃப் பாக்ஸில்’ சிந்திக்க வைக்க வேண்டும் என்று, வித்தியாசமான டிசைனில் நெக்ஸாவில் வீற்றிருக்கிறது இக்னிஸ். இப்போதைக்கு இந்த மூன்றையும் மோதவிட்டால், ‘சபாஷ்; சரியான போட்டியாக இருக்கும்’ என்று தோன்றியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick