மோட்டார் கிளினிக் - கேள்வி - பதில் | Question and Answers - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்

நான் புதிதாக 150சிசி பைக் வாங்க உள்ளேன். எனக்கு யமஹா FZ பைக் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், அதில் இரண்டு வெர்ஷன்கள் இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம். தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

- அருமைநாதன், இமெயில்.

2008-ம் ஆண்டு முதல், பெரிய மாற்றங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்டு வரும் FZ-16 பைக்கின் மாடர்ன் அவதாரம்தான் FZ-Fi. பழைய பைக்கில் இருந்த கார்புரேட்டருக்குப் பதிலாக,  இதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய இன்ஜின் மற்றும் சேஸியைக் கொண்டிருக்கும் FZ-Fi பழைய FZ-16 பைக்கைவிடக் குறைவான சக்தியை வெளிப்படுத்தினாலும், பைக்கின் குறைவான எடை அதை சரிக்கட்டிவிடுகிறது. இரண்டு பைக்குகளுக்கும் இடையே எட்டாயிரம் ரூபாய் விலை வித்தியாசம் இருப்பதால், இரண்டையும் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு உங்கள் தேவைக்கேற்ப முடிவெடுப்பது நல்லது. கட்டுமஸ்தான டிஸைன்தான் முக்கியம் என்பவர்கள் FZ-16 பைக்கையும், லேட்டஸ்ட் தொழில்நுட்பம் அவசியம் என்பவர்கள் FZ-Fi பைக்கையும் தேர்வு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick