இடி இடிக்குது... பற பறக்குது!

ரீடர்ஸ் ரிப்போர்ட் - ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500தமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

திரும்பவும் வைக்கும்; விரும்பவும் வைக்கும் - இதுதான் தண்டர்பேர்டின் ஸ்பெஷல். சாலையில் தண்டர்பேர்டின் பீட் சத்தத்தை நின்று ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இதன் ரைடிங் பொசிஷன் மற்றும் க்ரூஸிங் ஸ்டைலுக்கு ரசிகர்கள் நிறைய!  ‘வீ ஆர் தண்டர்பேர்டு ஃபேன்ஸ்’ என்று நம் அலுவலகத்துக்கு வந்த ரவிக்குமார், ஜெகன் அஷ்வின், கோகுல் மூவரையும் தண்டர்பேர்டு 500-ல் ஏற்றினோம். ‘‘ரெவ்யூதானே... பண்ணிட்டா போச்சு!’’ என அவர்களும் உற்சாகமாக ஆக்ஸிலரேட்டரை முறுக்கித் தள்ளிவிட்டார்கள்.

ஸ்டைல், டிஸைன்

ரவி: உட்கார்ந்த உடனேயே நம்மையும் அறியாமல் ஒரு கெத்து வந்துடுது. கிளாஸிக் டிஸைன்தான் இதிலும் அதிகமா இருக்கு. அந்த வட்டமான டயல்களே ‘நானும் க்ளாஸிக்தான்’னு சொல்லுது. ஆல் பிளாக் தீம் இன்ஜின் டிஸைனும் சூப்பர். வைப்ரேஷன் அதிகமா இருக்கிறதால, சைடு வியூ மிரர் எனக்குத் தெளிவா தெரியலை; ஆட்டம்தான் அதிகமா இருக்கு. என் உயரத்துக்கு தண்டர்பேர்டு 500 செட் ஆகாதுன்னு நினைக்கிறேன். எடை அதிகம்ங்கிறதால பேலன்ஸ் பண்ணவும் ரொம்ப சிரமமா இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick