லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்! | Suzuki Access 125 - Readers Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!

ரீடர்ஸ் ரெவ்யூ - சுஸூகி ஆக்ஸஸ் 125தமிழ் - படங்கள்: தே.அசோக்குமார்

பெயர்: பாபு கிருஷ்ணன் - சுஜாதா

ஊர்: கல்பாக்கம்

தொழில்: மெடிக்கல் ஷாப் உரிமையாளர்

வாகனம்: சுஸூகி ஆக்ஸஸ் 125

ஓடோ ரீடிங்: 865 Km

வாங்கிய தேதி: ஜனவரி 4, 2017

விலை: ரூ.67,866

‘ரீடர்ஸ் ரெவ்யூ போட்டோ ஷூட். கல்பாக்கத்தில் எங்கே வரணும்?’ என்று வாட்ஸ்-அப் செய்தால், ‘‘நீங்க வர வேண்டாம்; நானே சென்னைக்கு வந்துடுறேன்!’’ என்று தனது புதிய சுஸூகி ஆக்ஸஸ் 125-ல் மனைவி சுஜாதாவுடன் பறந்து வந்துவிட்டார் பாபு கிருஷ்ணன். ‘‘ஸ்கூட்டரில் லாங் ரைடு போய் ரொம்ப நாளாச்சு. அதான் கிளம்பிட்டோம்!’’ என்று பேச ஆரம்பித்தார்.

‘‘கல்பாக்கத்தில் 25 வருஷங்களா மெடிக்கல் ஷாப் வெச்சு நடத்துறேன். மோ.வி படிச்சுட்டுத்தான் முதலில் ஸைலோ கார் வாங்கினேன். அப்புறம் பல்ஸர் 180. பைக்கில் லாங் ரைடு போறது ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுக்கப்புறம் வீகோ; அப்புறம் ஆக்டிவா 125. ஆக்டிவா 70,000 ஓடிருச்சு. அதான் புதுசா எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்னு யோசிச்சப்போ, என் முன்னால வந்து நின்னது டிவிஎஸ் ஜூபிட்டரும், புது சுஸூகி ஆக்ஸஸும்தான்.

ஏன் ஆக்ஸஸ்?

ஜூபிட்டரும் ஆக்ஸஸும் கடுமையான போட்டியில இருந்துச்சு. மனைவி சொல் தானே மந்திரம்; அவங்களுக்கு ஜூபிட்டரை விட ஆக்ஸஸ்தான் பிடிச்சிருந்தது. ‘இதோட ஹெட்லைட் ஸ்டைலும் ஸ்மூத்னெஸும் நல்லா இருக்குப்பா’ன்னு என் பொண்ணும் மனைவியும் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

கல்பாக்கத்துல இருக்கிற KS சுஸூகியில் என் பிறந்த நாள் அன்னிக்குப் போனோம். நல்ல ரெஸ்பான்ஸ். இரண்டே நாள்ல டெலிவரி கொடுத்துட்டாங்க. ஆன்ரோடு விலை 67,866 ரூபாய் வந்துச்சு. பைக் கம்பெனிங்க முக்கியமான சில சின்னச் சின்ன விஷயங்களைக்கூட ஏன் ஆக்சஸரீஸில் சேர்த்து தனி பில் போடுறாங்கன்னு தெரியலை. ஃப்ளோர் மேட், ஃபுட் ரெஸ்ட், லேடீஸ் ஹூக் எல்லாமே எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் பில்லில் வாங்கினேன்.

எப்படி இருக்கிறது ஆக்ஸஸ் 125?

300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால், கல்பாக்கத்தில் இருந்து சென்னைக்குப் போயிட்டு வரலாம். அப்புறமும் 40 கி.மீ வரை ஓடும். சமயங்கள்ல என் மனைவியே பொன்னேரிக்கு ஸ்கூட்டர்ல கிளம்பிடுவா. ஆக்ஸிலரேட்டரை நல்லா முறுக்கினா, 100 வரைக்கும் டச் ஆகுது. ஆனா, என் மனைவிக்கும் பொண்ணுக்கும் ஸ்பீடு பிடிக்காது. அதான் 70 கி.மீ என்னோட ஆவரேஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick