மலைகளின் தோழன்!

மு.ராஜேஷ் - படங்கள்: க.மணிவண்ணன் ரீடர்ஸ் ரெவ்யூ - மஹிந்திரா பொலேரோ பவர் ப்ளஸ்

பெயர்: நந்தகுமார்
ஊர்: ஊட்டி
தொழில்: கட்டுமான நிறுவனம்
கார்: மஹிந்திரா பொலேரோ பவர் +
எடுத்தது: நவம்பர் 2016
ஓடியது: 4,126 கி.மீ
விலை: ` 9.34 லட்சம்

நான் ஊட்டியில் கட்டுமான நிறுவனம் நடத்திவருகிறேன். என்னிடம் ஏற்கெனவே மாருதி ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. அது போதுமானதாக இருந்தாலும், வேலை தொடர்பாக அடிக்கடி மலையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, ஒரு எஸ்யூவி கார் வாங்கலாம் எனத் தீர்மானித்தேன். பொதுவாகவே, மலைப் பிரதேசங்களில் மஹிந்திராவின் பொலேரோவுக்கு தனி மரியாதை உண்டு. அதன் கம்பீரத் தோற்றம் எனக்கும் பிடிக்கும். அதனால், புதிதாக வந்த பொலேரோ பவர் ப்ளஸ் எனது முதல் சாய்ஸாக இருந்தது.

ஏன் பவர் ப்ளஸ்?


என் நண்பர்களிடம் இந்த காரைப் பற்றிக் கேட்டேன். எல்லோருமே நல்லவிதமாகக் கூறினார்கள். கொடுக்கும் பணத்துக்குத் தகுந்தவாறு வசதிகளும் இருப்பதால், இதைத் தேர்ந்தெடுத்தேன். ஷோரூமுக்குச் சென்றபோது பொலேரோ பவர் ப்ளஸ் மாடலின் சிறப்புகளைப் பற்றிக் கூறினார்கள். உடனே புக் செய்துவிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick