கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் - கேட்ஜெட்ஸ்கார்த்தி

ராண்டு ஆகியும் இன்னும் ரெட்மி3S, ரெட்மி நோட்-3 போன்ற மொபைல்களுக்கு ஆன்லைனில் வரிசையில் நிற்கிறார்கள் மக்கள். எப்போதாவது வரும் விற்பனையும் இரு நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட்-4 எனும் மொபைலை களம் இறக்கி இருக்கிறார்கள்.

5.5” ஸ்கிரீன் , மெட்டல் பாடி, 4ஜி டூயல் சிம், Snapdragon 625 octa-core 2.0GHz பிராசஸர் என அசத்தலாக வெளியாகி இருக்கிறது ரெட்மி நோட்-4. ரியர் கேமராவுக்கு 13 மெகாபிக்ஸல் CMOS கேமராவும், ஃப்ரன்ட் கேமராவுக்கு 5 மெகாபிக்ஸல் கேமராவும் தரப்பட்டிருக்கிறது. இந்த மொபைலிலும் ஹைப்ரிட் சிம் எனும் பழைய பல்லவியைப் பாடுகிறது ரெட்மி. இரண்டு சிம் கார்டு அல்லது ஒரு சிம், ஒரு மெமரி கார்டு என பொருத்தும் வடிவில் இதன் சிம் ஸ்லாட் வடிவமைப்பட்டிருக்கிறது. ரியர் கேமராவின் ஃபிளாஷ் லைட்டுக்குக் கீழ், ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4100 mAh பேட்டரி திறனில் இந்த மொபைல் இயங்குகிறது. இதில் இருக்கும் ஆக்டா-கோர் பிராசஸர் பெரிய கேம்களையும், அசால்ட்டாக ஹேண்டில் செய்கிறது. மெமரி கார்டு மூலம் 128 ஜிபி வரை, இதன் எக்ஸ்டெர்னல் மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.  ரெட்மி-3 , ரெட்மி 3S-ஐப் போல இந்த மொபைலிலும் மூன்று மாடல்களை வெளியிட்டு இருக்கிறது ரெட்மி.

2 GB ரேம், 32 GB இன்டெர்னல் மெமரி `9,999

3 GB ரேம், 32 GB இன்டெர்னல் மெமரி `10,999

4 GB ரேம், 64 GB இன்டெர்னல் மெமரி `12,999

 ப்ளஸ்: பேட்டரி திறன், பட்ஜெட் கேமரா,

மைனஸ்: ஹைப்ரிட் ஸ்லாட், கேமரா திறன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick