தி ஆர்ட் ஆஃப் பெர்ஃபாமென்ஸ்!

பெர்ஃபாமென்ஸ் டிரைவ் - ஜாகுவார்வேல்ஸ்

ரு காரின் பெர்ஃபாமென்ஸ் என்ன என்பதை அளந்து சொல்ல 0 - 100 வேகத்தை ஒரு கார் எத்தனை விநாடியில் கடக்கும்; 40 - 60 கி.மீ வேகத்தை எவ்வளவு சீக்கிரம் எட்டும் என்றெல்லாம் பல அளவுகோல்கள் உள்ளன. ஆனால், இது போன்ற எண்களில் எல்லாம் ஜாக்குவாருக்கு நம்பிக்கையில்லை. அதைப் பொறுத்தவரை பெர்ஃபாமென்ஸ் என்பது ஒரு கலை. ஒருவர் எப்படிச் சிறப்பாகப் பாடுகிறார், எவ்வளவு சிறப்பாக ஓவியம் வரைகிறார் என்பதையெல்லாம் எப்படி அளவுகோல் கொண்டு அளக்க முடியாதோ, அதேபோலத்தான் ஒரு காரின் பெர்ஃபாமென்ஸையும் அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது; அதை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று சொல்லும்.

தனக்கு ‘சொல்லும் செயலும் ஒன்றுதான்’ என்பதை நிரூபிக்கும் வகையில் ஜாகுவார், ‘தி ஆர்ட் ஆஃப் பெர்ஃபாமென்ஸ்’ என்ற பெயரில் தன் ஜாகுவார் கார்களின் பெர்ஃபாமென்ஸை ஊர் உலகுக்கெல்லாம் எடுத்துச் சொல்ல, 32 நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது. அதன் முதல் நிகழ்ச்சியை புனே அருகே ஆம்பிவேலியில் இருக்கும் தனியார் விமான ஓடுதளத்தில் நடத்தியது. அதில் ஜாகுவாரின்  XE, XF, XJ,  F-TYPE  மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட F-PACE ஆகிய அனைத்து கார்களையும் ஜாகுவார் ஆர்வலர்கள் டயர்கள் பொசுங்கும் அளவுக்கு ரேஸ் வீரர்கள் போல ஓட்டி பரவசம் அடைந்டார்கள்.  ரேஸ் டிராக்கில் ஜாகுவாரை ஓட்டியவர்களின் மகிழ்ச்சியை நேரில் பார்த்து பெருமிதப்பட்டுக்கொண்டிருந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் எம்.டி.ரோஹித் சூரி, ‘Grace…space…pace என்ற வார்த்தைகளோடு பிரிட்டிஷார் ஜாகுவாரை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதேபோல, இப்போது ஜாகுவாரின் இந்திய ரசிகர்களும் ஜாகுவாரை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்’ என்றவர், அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு XE என்பது டிரைவர்ஸ் கார்;  XF என்பது அதன் சொகுசு கார் வெர்ஷன்;  XJ என்பது XE மற்றும் XF இரண்டின் நல்ல அம்சங்களையும் கொண்ட மாடல்’ என்று ஒவ்வொரு மாடல்கள் பற்றியும் விளக்கம் சொல்லி அதை பயிற்சியாளர்களின் துணையுடன் ஓட்டிப் பார்க்க ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick