களமிறங்குகிறது காம்பஸ்!

ஃபர்ஸ்ட் லுக் - ஜீப் காம்பஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

லக அளவில் எஸ்யூவி கார்களுக்குப் பிரசித்திபெற்ற ஜீப் நிறுவனத்துக்கு, காம்பஸ் ஒரு முக்கியமான வாகனமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதுதான் அது இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யவிருக்கும் விலை குறைவான கார்!

டிசைன்

பிஎம்டபிள்யூவின் X1 எஸ்யூவி இருக்கும் அதே சைஸில்தான் காம்பஸ் இருக்கிறது. மினி கிராண்ட் செரோக்கி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் காம்பஸ் எஸ்யூவி, போட்டியாளர்களிடமிருந்து தனித்துத் தெரியக்கூடிய டிசைனைக் கொண்டுள்ளது. பெரிய கிரில், சதுரமான வீல் ஆர்ச், கீழ் நோக்கிச் சரியும் ரூஃப், Shark Fin போன்ற D-பில்லர் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீப்பின் சிறிய - அகலமான எஸ்யூவியான ரெனிகாடே தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் காம்பஸ் எஸ்யூவி தயாரிக்கப்படுகிறது. ஆனால், அதனுடன் ஒப்பிடும்போது, கூடுதல் இடவசதிக்காக நீளமான வீல்பேஸ் மற்றும் சற்று மாற்றியமைக்கப்பட்ட Independent சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick