ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன் தொகுப்பு: இரா. கலைச்செல்வன்

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதைப்போல, பல மாற்றங்களோடு களமிறங்கியுள்ளது புதிய ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன். கறுப்பு நிற ‘ஹனி கோம்ப்’ கிரில், பழைய ஃபிகோவின் க்ரோம் ஃபினிஷிங் இருந்த இடங்களிலெல்லாம் கறுப்பு நிறம், குறிப்பாக காரின் கூரை, இரண்டு பக்க மிரர்கள், அலாய் வீல் ஆகியவற்றில் கறுப்பைக் கொண்டுவந்ததில், ‘தனியொருவனாக’ தனித்து நிற்கிறது புதிய ஃபிகோ ஸ்போர்ட்ஸ்.

காரின் இன்ட்டீரியரிலும்கூட கறுப்பு நிறம் தான். ஸ்டீயரிங் வீல் கவர், சீட், கியர் பூட் போன்றவற்றில் கறுப்பு நிறத்தின் இடையே இருக்கும் மெல்லிய சிகப்பு நிற நூல் தையல்கள் புதுவித அழகைக் கொடுக்கின்றன. ஃபிகோவின் டைட்டானியம் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் மாடலில், EBD சிஸ்டத்தோடு இணைந்த ஏபிஎஸ், முன்பக்கம் இரண்டு காற்றுப்பைகள், எலெக்ட்ரிக் மிரர் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்கள் மாறாமல் அப்படியே இடம் பெற்றிருக்கின்றன. அடிக்கும் வெயிலுக்கு ‘ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்’ வசதிகொண்ட ஏ.சி பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick