அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ல புதிய கார்களின் அறிமுகத்தோடு, புதிய நிதி ஆண்டு பிறந்திருக்கிறது. இதில் முக்கியமானது, முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 3-வது தலைமுறை மாருதி சுஸூகி டிசையர். இந்தியச் சாலைகளில் இதுவரை சுமார் 14 லட்சம் டிசையரை மாருதி ஓடவிட்டிருக்கிறது. நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களைப் பட்டியலிட்டால், ஆல்ட்டோவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது டிசையர். இந்த மாதம் அறிமுகமாகும் ‘ஆல் நியூ டிசையருக்கு’ இப்போதிருந்தே காம்பேக்ட் செடான் பிரியர்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஸ்விஃப்ட்டில் இருந்து உருவெடுத்த கார் என்றாலும், ஸ்விஃப்ட் என்ற அடையாளம் இல்லாமல் அறிமுகமாக இருக்கும் புதிய டிசையரில், என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இந்த இதழில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அளித்திருக்கிறோம்.

லேட்டஸ்ட்டாக அறிமுகமாகி இருக்கும் கார்களில், கவனிக்கத்தகுந்த மற்றொரு கார், ஹோண்டா WR-V. இதை ஜாஸ் காரின் அடுத்த வடிவம் என்று சிலர் எளிதாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைக்கு வேகமாக வளர்ச்சி காணும் செக்மென்ட் என்றால், அது காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் செக்மென்ட்தான். இது இரண்டுக்கும் இடையில் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கும் ஹோண்டா WR-V - விலை, கேபின் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில், ஹூண்டாய் i20 ஆக்டிவ் உடன் போட்டி போடுமா... இடவசதியில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை முந்துமா போன்ற கேள்விகளுக்கு விடை காண, இந்த மூன்று கார்களையுமே டெஸ்ட் டிரைவ் செய்து கம்பேரிஸன் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறோம்.

அதேபோல, ஓட்டுதல் சுகம் அளிக்கும் ஹாட் ஹேட்ச்பேக்குகளின்  வரிசையில், மாருதி சுஸூகியின் பெலினோ RS இணைந்திருப்பதால், இது எந்தெந்த வகைகளில் எல்லாம் ஃபியட் அபார்த் புன்ட்டோ மற்றும் போலோ GT TSI ஆகியவற்றோடு போட்டி போடுகிறது என்பதை, டெஸ்ட் செய்வதைப் போன்ற ஒரு சுகானுபவம் இருக்க முடியாது. அந்த சுகானுபவத்தை ரசனை குறையாமல் உங்களுடன் இந்த இதழில் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

அன்புடன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick