மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மாருதி சுஸூகி இக்னிஸ், ஹூண்டாய் கிராண்ட் i10 ஆகியவற்றில் எதை வாங்கலாம்? எனக்கு AMT/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்தான் வேண்டும்.

- கே. நடராஜன், கோயம்புத்தூர்.


கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான இக்னிஸ், அதிகப்படியான டிமாண்டைப் பெற்றுவிட்டது. நீங்கள் பாதுகாப்பு வசதிகள் இருக்கும் வேரியன்ட்டைத் தேர்வு செய்வதே நல்லது. கிராண்ட் i10 காரில் ஓட்டுநருக்கான காற்றுப்பை மட்டுமே ஸ்டாண்டர்டாகக் கிடைக்கிறது; ஆனால், இக்னிஸின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள்  மற்றும் ஏபிஎஸ் பிரேக் உள்ளன. கிராண்ட் i10 காரில் இருப்பது, 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக். மேலும், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் - கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி - DRL ஆகியவற்றைப் பொருத்தியுள்ளது ஹூண்டாய். இக்னிஸ் காரில் இருப்பது 5 ஸ்பீடு AMT. சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதியில் கிராண்ட் i10 காருக்கு இது கடும் சவாலாக விளங்குகிறது. இக்னிஸின் விலை அதிகமாக இருப்பது நெருடல். ஸ்டைலான கார் வேண்டும் என்றால், இக்னிஸ்; பிராக்டிக்கலான கார் வேண்டும் என்றால் கிராண்ட் i10.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick