ஜிக்ஸரில் ஏ பி எஸ் பிரேக்ஸ்!

ஃபர்ஸ்ட் ரைடு / ஜிக்ஸர் SF-Fi ABS தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் இருக்கும் 150 - 160சி.சி பைக் செக்மென்ட்டில், தவிர்க்க முடியாத பைக் ஜிக்ஸர். சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்குப் பெயர் பெற்ற ஜிக்ஸர் பைக்கின் ஃபுல் பேரிங் மாடலான ஜிக்ஸர் SF பைக்கில், தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியைச் சேர்த்திருக்கிறது சுஸூகி. 150 - 160சி.சி பைக் செக்மென்ட்டில், ஏபிஎஸ் வசதியைக்கொண்டிருக்கும் ஒரே பைக்கான ஜிக்ஸர் SF, எப்படி இருக்கிறது?

டிசைன்

முன்பக்க மட்கார்டில் சின்னதாக ஏபிஎஸ் ஸ்டிக்கர் ஒன்றும், முன்பக்க டிஸ்க் பிரேக் காலிப்பரில் வீல் ஸ்பீடு சென்ஸார் ஒன்றும் புதிதாக இடம்பெற்றுள்ளன. இங்கே நாம் டெஸ்ட் செய்தது ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மாடல் என்பதால், கார்புரேட்டர் மாடலில் இருக்கும் Fuel Pet Cock இங்கே இல்லை. ஆனால், அந்த ஏரியாவை கவர் செய்யாமல், வெற்றிடமாக இருப்பது நெருடல். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick