எது வேண்டும்? - ஹுண்டாய் வெர்னா Vs ஹோண்டா சிட்டி

போட்டி/ஹூண்டாய் வெர்னா VS ஹோண்டா சிட்டி ஆட்டோமேட்டிக் (பெ)தொகுப்பு: தமிழ்

ஜித், விஜய் படங்கள்போல் ஹூண்டாய் கார்களுக்கும் செம ஓப்பனிங் இருக்கும். ‘கார் வந்துடுச்சா... ஆட்டோமேட்டிக் இருக்கா.. மைலேஜ் எவ்வளவு இருக்கும்?’ என்று கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள். கார் ரிலீஸான பிறகு சும்மானாச்சும் போய் டெஸ்ட் டிரைவ் செய்வார்கள். அந்த லிஸ்ட்டில் ஹைப்-ஐ ஏற்றிய கார், ஹூண்டாயின் புதிய வெர்னா. இந்த முறை ஃப்ளூயிடிக் வெர்னா இல்லை. இதன் புதிய பெயர் - நியூ ஜென் வெர்னா. ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் டிரைவ் என்று வெர்னாவைத் தனியாக ஓட்டியாகிவிட்டது.

‘ஒரு கம்பாரிஸன் டெஸ்ட் பண்ணிடுங்க’ என்று ஆசிரியர் சொன்னபோது... யோசிக்கவே இல்லை. பெட்ரோல் செடான்களில் வெர்னாவுக்கு மட்டுமில்லை; சியாஸ், லீனியா, சன்னி என்று எல்லா செடான்களுக்கும் மூத்த அண்ணன் - ஹோண்டா சிட்டி. சிட்டியை வெர்னாவுடன் மோதவிட்டால்தானே சரியாக இருக்கும். இரண்டு ஆட்டோமேட்டிக் கார்களிலும் பெட்ரோலை நிரப்பிவிட்டுக் கிளம்பினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick