மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் இதுதான்!

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்  பற்றிய தகவல்கள் லீக் ஆகியுள்ளன. Grazia எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ‘Advanced Urban Scooter’, ஒரு 125சி.சி ஸ்கூட்டராக இருக்கலாம். மேலும், டூயல் டோன் மேட் ஃப்னிஷ், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக், டிஜிட்டல் மீட்டர், CBS, USB மொபைல் சார்ஜர், 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள், அலாய் ஃபுட் பெக், Seat Release Latch மற்றும் சென்ட்ரல் லாக்கிங் என Grazia-வில் எக்கச்சக்க வசதிகள்.  Grazia-வை 2,000 ரூபாய் செலுத்தி புக் செய்துகொள்ளலாம்.
Grazia-வுக்கு அடுத்து, மேம்படுத்தப்பட்ட CBR பைக்குகளும் வரலாம். SDBV சஸ்பென்ஷன், LED ஹெட்லைட்-டெயில் லைட், Nissin டிஸ்க் பிரேக் - BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் என புதிய CBR 650F பைக்கை, அதே விலைக்கு (7.30 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ் ஷோரூம்) ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய CBR 150R மற்றும் CBR 300R பைக்குகளும் வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick