டெரர், த்ரில், திகில்... ரைடு ஹிமாலயா!

மாருதி ராலி / ரைடு ஹிமாலயாகா.பாலமுருகன் - படங்கள்: தி.விஜய்

மாருதி நடத்தும் ராலிகளில் மிகப் பிரபலமானது, ‘ரைடு தி ஹிமாலயா’. உலகின் மிக உயரமான இடங்களில் நடக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ராலி போட்டிகளில் மிக முக்கியமானது இது. இந்த ஆண்டு, மாருதிக்கு 19-வது ராலி. அக்டோபர் 7 அன்று,ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி நகரில் கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்ட இந்த ராலி போட்டி, அக்டோபர் 14 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லே நகரில் நிறைவடைந்தது.

மணாலி, காஸா, சார்ச்சு, கார்கில், லே ஆகிய இடங்களின் வழியாக மொத்தம் சுமார் 2,000 கி.மீ தூரம் நடந்த இந்த ராலி போட்டியில், எக்ஸ்ட்ரீம் கார், எக்ஸ்ட்ரீம் பைக், அட்வெஞ்சர் கார் என மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 106 ராலி வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பங்கேற்பவர்கள், கடைசி வரை கலந்துகொண்டு போட்டியை நிறைவு செய்வதே பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவதுதான்  ஆச்சர்யமான விஷயம். போட்டி நடந்த ஏழு நாள்களும் பரபரப்புக்கும் த்ரில்லுக்கும் பஞ்சம் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick