டபுள் ஹாட்ரிக் சாம்பியன்! - ஆளப்போறான் ஜெகன்!

சாதனை/ரேஸ்தமிழ்

`Jegan National Champion’ - ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் சாம்பியன் ஆனபோது, ரேஸர் ஜெகன் நம்பரை இப்படித்தான் என் போன் கான்டாக்ட்ஸில் பதிவேற்றியிருந்தேன். இப்போது வரை அந்த சாம்பியன் பட்டத்தை யாருக்கும் விட்டுத் தரவில்லை ஜெகன். தொடர்ந்து ஆறாவது முறையாக, இந்த ஆண்டும் சாம்பியன் ஆகியிருக்கிறார்.

‘அடுத்த நேஷனல் சாம்பியன்ஷிப் ட்ராஃபியை ஏந்தியபடி போஸ் கொடுக்கப் போகிறவர் யாரோ?’ என்று சென்ற இதழில் முடிந்த ரேஸ் கட்டுரையின் தொடர்ச்சி யாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம். டி.வி.எஸ். ரேஸிங் அணிக்காக பைக் ஓட்டும் ஜெகன்தான் டி.வி.எஸ்-ஸின் முக்கியமான நட்சத்திரம். 4-வது ரவுண்டில் கோவையில் நடந்த ரேஸில், பைக் க்ராஷ் ஆகி வெளியே போனபோது... ஜெகன்கூட லேசாக ஜெர்க் ஆகியிருக்கக்கூடும். ஆனால், டி.வி.எஸ். அணி, ஜெகன்மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை.

சராசரிக் குடும்பப் பின்னணி கொண்ட ஜெகன், புரொஃபஷனல் ரேஸர்களுடன் மோதி ஜெயித்திருக்கிறார். அவருடன் ஒரு ஸ்பீடு பேட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick