நோ ரோடு... நோ ப்ராப்ளம்!

ஆஃப்ரோடு சாகசம் / மஹிந்திராதமிழ் - படங்கள்: தென்றல்

ந்தப் பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்! அன்று கொச்சின் அதிர்ந்தது. காரணம், மஹிந்திரா நடத்தும் கிளப் சேலன்ஜ் மற்றும் தார் ஃபெஸ்ட் எனும் ஆஃப் ரோடு திருவிழா. ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஜீப் பிடிக்கும். ஜீப் பிரியர்களுக்கு மஹிந்திரா நடத்தும் இந்த ஆஃப் ரோடு சேலன்ஜ் ரொம்பவும் பிடிக்கும். சேலன்ஜ் என்றால்... ஓர் இடத்துக்குச் சீக்கிரம் போய்விட்டு வருவது மாதிரி இல்லை. இது அதுக்கும் மேல!

FIFA கால்பந்துப் போட்டிபோல் மஹிந்திரா கிளப் சேலன்ஜுக்கு கொச்சினில் செம ரெஸ்பான்ஸ். மஹிந்திராவின் தார் ஜீப்கள் இரவும் பகலும் உறுமிக்கொண்டிருந்தன. எல்லாமே மாடிஃபைடு தார் ஜீப்கள்தான். கேரளா, கர்நாடகா, மேகாலயா என்று பல மாநிலங்களில் இருந்தும் தார் ஜீப் டிரைவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 12 கிளப்கள். அதாவது, 12 தார் ஜீப்கள் மட்டும்தான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்