புகை... கெட்டது இல்லை! - காரணம்... சைலன்ஸர்!

ஏன்... எதற்கு... எப்படி?/எக்ஸாஸ்ட்-பைக்தமிழ்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது மனிதர்களுக்கு. ‘பைக்கின் திமிரு அதன் எக்ஸாஸ்ட்டில் தெரியும்’ - இது பைக்குகளுக்கு. ஒரு வாகனத்தின் எக்ஸாஸ்ட் சத்தம் - ‘என்னா சவுண்டு’ என்று ஹிப்னாடிஸமும் செய்யும்; ‘என்னடா சவுண்டு இது?’ என்று எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆனால், எக்ஸாஸ்ட் என்பது வாகனத்தின் பர்ஃபாமென்ஸுக்கு ‘Off the Screen’-ல் வேலை செய்யும் ஒரு முக்கியமான பாகம்.

ஓர் உடம்பு இருக்கிறது; அதை ஆரோக்கியமாக  வைத்திருப்பதற்கு டயட், சாப்பாடு இருந்தால் மட்டும் போதாது. ‘வெளியேற்றம்’ சீராக நடக்க வேண்டும். அதேபோல்தான் வாகனங்களுக்கும். ‘எக்ஸாஸ்ட்’ என்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜினுக்கு உள்ளே நடக்கும் சண்டையில் உருவாகும் வாயுக்களைச் சரியாகப் பிடித்து, ஃபில்டர் செய்து வெளியே அனுப்பினால்தான், இன்ஜினுக்கும் பைக்குக்கும்... ஏன் நமக்கும்கூட ஆயுள் கெட்டியாக இருக்கும். ‘மஃப்ளர்’, ‘பைப்’ எனப் பெயர்கள்கொண்ட சைலன்ஸர் எனும் எக்ஸாஸ்ட் பற்றிப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick