ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் கார்/பைக் தமிழ்

பைக் ஹெல்மெட் கேமரா

 இது கொஞ்சம் அட்வென்ச்சர் விரும்பிகளுக்கானது. சிலர் பைக்குகளில் லாங் டூர் அடிப்பதை ஹாபியாக வைத்திருப்பார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள்தானே நினைவுகளின் தொகுப்பு. குழுவாகவோ, டபுள்ஸோ என்றால் பரவாயில்லை. தனியாகப் போனால், ஒவ்வொரு இடத்திலும் வீடியோ எடுக்க போனை ஆன் செய்து, நினைவுகளைப் பதிவு செய்வதற்குள் கண்ணைக் கட்டிவிடும். இதுவே ஹெல்மெட்டிலேயே கேமரா இருந்தால்..?

இந்த கேமராவை உங்கள் ஹெல்மெட்டில் பொருத்திக்கொள்ளலாம். வேண்டுமென்ற இடத்தில் கேமராவை ஆன் செய்து, உங்கள் பயணத்தையே நீங்கள் வீடியோ எடுப்பதுதான் இதன் ஸ்பெஷல். ரேஸ் போட்டிகளில் இருக்கும் அம்சம் இது. இதை சாதாரண பயணங்களுக்குப் பயன்படுத்தினால் த்ரில்லிங்காகத்தானே இருக்கும். இதை அட்வென்ச்சர் கேமரா என்றும் அழைக்கிறார்கள். உங்கள் பயணத்தின்போது நீங்கள், மற்றவர்கள் சாலையில் செய்யும் தவறையும் சுட்டிக் காட்ட இது ரொம்பவும் பயன்படும். இதில் 32GB வரை மெமரி இருப்பதால், வீடியோ எடுத்து அசத்தலாம். ‘ரைடிங் டு... ஹில்ஸ்’ என்று யூடியூபில் நீங்கள் பயணிக்கும்போது எடுத்த லைவ் வீடியோவை அப்லோடுங்கள். லைக்ஸ் குவியலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick