தொழில்நுட்பங்களும் பாதுகாப்பும்!

உபகரணங்கள்/பாதுகாப்புராகுல் சிவகுரு

ந்தியா... உலகளவில் சாலை விபத்துகளில் அதிக மரணங்களைச் சந்திக்கும் நாடு என்ற அவப்பெயரைப் பெற்றிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒருசில கார் தயாரிப்பாளர்களே தமது தயாரிப்புகள் அனைத்திலும், பாதுகாப்பு வசதிகளை ஸ்டாண்டர்டாக அளிக்கின்றனர். இதற்கு வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியச் சாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் குறைவு என்பதே காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனாலேயே, சில விலை அதிகமான பாதுகாப்பு உபகரணங்கள், நம் ஊரில் விற்பனை செய்யப்படும் கார்களில் இல்லாமல் போனாலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாடலில் இருக்கும் அவலம் நீடிக்கிறது. ஏனெனில், பாதுகாப்பு வசதிகள் என்பது, இன்னுமே கார் தயாரிப்பாளர்கள் தவிர்க்கும் விஷயமாகவே இருந்துவருகிறது. இதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம். ஆம், காரின் விலையைக் குறைக்க வேண்டுமென்றால், நாம் பாதுகாப்பு வசதிகள் இல்லாத வேரியன்ட்டையே வாங்கும் மனநிலையில்தான் இருக்கிறோம். எனவே, எந்த காரை வாங்குவது என்பதில் தரும் முக்கியத்துவத்தை, அதில் இருக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகளிலும் காட்டுவது நன்மை தரும். ஆக, ஒரு புதிய காரில் கட்டாயமாக இருக்கவேண்டிய பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பே இந்தக் கட்டுரை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick