சஸ்பென்ஷன்கள் பலவிதம்! | Different types of suspensions used in Bikes - Motor Vikatan | மோட்டார் விகடன்

சஸ்பென்ஷன்கள் பலவிதம்!

ஏன் எதற்கு எப்படி? - சஸ்பென்ஷன்/பைக்தமிழ்

மைலேஜ், பெர்ஃபாமென்ஸ் என்பதைத் தாண்டி, ஒரு பைக்கில் சொகுசுக்கும் கம்ஃபர்ட்டுக்கும் உதவி புரிந்து, ரைடிங்கை முழுமையாக்குவது, சஸ்பென்ஷன். ‘எவ்வளவு தூரம் பைக் ஓட்டினாலும் முதுகுவலி வரக் கூடாது’ என்பதுதான் இப்போது பலருக்கும் கோரிக்கை. அதாவது, ‘சஸ்பென்ஷன் நல்லா இருக்கிற பைக் வேண்டும்’ என்பதுதான் இதன் அர்த்தம். சாலைக்கும் வாகனத்தின் டயர்களுக்கும் ஏற்படும் உராய்வை உள்வாங்கி, ரைடிங்கையும் ஹேண்ட்லிங்கையும் முடிவு செய்வது இந்த சஸ்பென்ஷன்தான்.

சஸ்பென்ஷன் என்றால் என்ன?

ரத்தமும் சதையுமாக என்று சொல்வார்களே... அதுபோல் ஸ்ப்ரிங்கும் டேம்ப்பிங்குமாகக் கலந்திருப்பதுதான் சஸ்பென்ஷன். ஸ்பிரிங்குகளை உங்களுக்குத் தெரியும். டேம்பர் என்றால், பைக்கின் முன் பக்கம் இருக்கும் ஃபோர்க் அசெம்பிளி, ஷாக் அப்ஸார்பர்கள், ஸ்ட்ரட்கள் - இவை எல்லாவற்றையும் டேம்பர் என்று சொல்லலாம். நீங்கள் ஒரு மேடு பள்ளத்திலோ ஸ்பீடு பிரேக்கரிலோ பைக்கை ஏற்றி இறக்கும்போது, உங்கள் ஃபோர்க் ஒரு தடவை மேலும் கீழும் இயங்கி வருவது ‘டேம்ப்பிங்’.

நாம் பயணிக்கும் சாலை, ஃப்ளாட்டாக மேடு பள்ளங்களின்றி இருந்தால், பிரச்னை இல்லை. ரஃப் அண்டு டஃப் டிரைவிங்தான் இங்கு தேவை. அதற்கு டயர்கள் மட்டும் போதாது. இதைத் திறம்படச் சமாளிக்கத்தான் சஸ்பென்ஷன் கண்டுபிடிக்கப்பட்டது. 1960-களில் ஓடிய பைக்குகளின் ஃபோர்க்குகளில் ஒற்றை டேம்பர்தான் இருந்தது. சாதாரண பிஸ்டன்தான்; வேகத்துக்கு ஏற்ப இதன் இயக்கத்தை ஆயில்தான் கன்ட்ரோல் செய்யும். பைக்குகளும் டயர்களும் இம்ப்ரூவ் ஆக, ரைடிங்கையும் மேம்படுத்தினார்கள். ‘கேட்ரிட்ஜ் ஃபோர்க்’ எனும் ராடுகள் வந்தன. கம்ப்ரஸனையும் ரீ-பவுண்டையும் தனித்தனியாகக் கவனித்துக்கொள்வதுதான் இதன் ஸ்பெஷல். இதற்கும் ஆயில்தான் கன்ட்ரோல். அதற்குப் பிறகு ஹைட்ராலிக், ஃபோர்க் டேம்பிங், டெலிஸ்கோப்பிக், மோனோஷாக், அப்சைடு டவுன் ஃபோர்க் என்று வெரைட்டியாக சஸ்பென்ஷன்கள் வர ஆரம்பித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick