வெள்ளம்... நோ ப்ராப்ளம்! - காருக்கு ரெயின்கோட்!

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

து வெள்ள நேரம். அதேநேரம், கார்/பைக் போன்ற வாகனங்களுக்கு நல்ல நேரம் இல்லாத நேரம். வசதிகள், ஸ்டைல், பாதுகாப்பு என்று எல்லா விதத்திலும் வாகனங்களுக்கு ஆக்சஸரீஸ் வந்துவிட்டன. ஆனால், இந்த வெள்ளப் பாதிப்பிலிருந்து வாகனங்களைப் பாதுகாக்க வழி இல்லையா?

இதற்கும் வழி கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில் இல்லை ஸ்பெயினில். உலகத்திலேயே பேரழிவுகள் அதிகம் நடக்கும் நாடு ஜப்பான். அதற்கு இணையாக வெள்ளப் பாதிப்புகளில் சிக்குவது ஸ்பெயின். வருடத்துக்கு எட்டு முதல் ஒன்பது புயல்கள் ஸ்பெயினைத் தாக்கும். வாகனங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான பாதிப்புகளைத் தடுக்க, ஒரு செம ஐடியா பண்ணியிருக்கிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பால் டீலா ஃப்யூன்ட் என்பவர்.

கார்கள் வெள்ளத்தில் மூழ்காமல், அடித்துச் செல்லாமல் இருக்க, ஒரு மிகப் பெரிய ‘வெள்ளப் பை’ ஒன்றைத் தயாரித்திருக்கிறார் பால் டீலா. இதற்கு ‘ஃப்ளட் கார்டு’ என்று பெயரும் வைத்துவிட்டார். https://www.floodguardph.com/ என்கிற வெப்சைட்டும் ஆரம்பித்து, ‘ஃப்ளட் கார்டு’ விற்பனை படுதூளாக நடந்துகொண்டிருக்கிறது.

தண்ணீரில் மூழ்காத அளவு மிக மெல்லிய பாலி மெட்டீரியலால் தயாரிக்கப்பட்ட இதில், ஒரு சொட்டு நீர்கூட காரின் உள்ளே புகாத வண்ணம் இதைத் தயாரித்திருக்கிறார் பால் டீலா. இதைப் பயன்படுத்துவதற்கு வீடியோவுடன் 5 வழிமுறைகளைச் சொல்கிறார் அவர். இதற்கு இரண்டு அல்லது மூன்று பேர் உதவி நிச்சயம் வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick