பிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ் - ரெனோ கேப்ச்சர் தொகுப்பு: தமிழ்

ரம்பக் காலங்களில் புது சினிமா ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த்துக்கும் விஜயகாந்த்துக்கும் ஒரு சின்னக் குழப்பம் வரும். அதேபோல்தான் ரெனோ நிறுவனத்தின் கேப்ச்சர். ஐரோப்பாவில் ஒரு கேப்ச்சர் (Captur) செம ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது, அங்கே ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்குச் சிம்ம சொப்பனம். இந்தியாவுக்கு வரவிருக்கும் கேப்ச்சர், கிட்டத்தட்ட ஐரோப்பிய கேப்ச்சரின் ஜெராக்ஸ்போலத்தான் இருக்கிறது. ஆனால், இது வேறு!

கொஞ்சம் கண்ணைக் கட்டத்தான் செய்யும். ஆனால், காரின் டிசைனிலும் இன்ஜினிலும் கொஞ்சம்கூட கன்ஃப்யூஸ் ஆகவில்லை ரெனோ. ‘இந்தாங்க பிடிங்க’ என்று டஸ்ட்டர் தயாரிக்கப்படும் ‘MO’ பிளாட்ஃபார்மில் அசத்தலாகத் தயாரித்து இந்தியாவில் இறக்கிவிட்டது. (ஐரோப்பிய கேப்ச்சர், ‘க்ளியோ’ எனும் கார் தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்மில் தயாராகிறது.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick