ஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா? | 2017 Honda CR-V First Drive – Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா CR-Vதமிழ்

‘ஏன்டா வாங்கினோம்’ என்று நம்மைக் கவலைப்பட வைக்காதவை ஹோண்டா கார்கள். ‘ஹோண்டா காரா... இன்ஜினுக்காகவே நம்பி வாங்கலாம்’ என்ற பெருமை ஹோண்டாவுக்கு உண்டு. பிரில்லியன்ட், பக்கா, ஸ்மூத், க்ளெவர், பவர்ஃபுல், வாவ்... இப்படி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் ஹோண்டா இன்ஜின்களை. இன்டர்னல் கம்பஷன் (பெட்ரோல்) இன்ஜின் தயாரிப்பில் உலகிலேயே நம்பர் ஒன் - ஹோண்டாதான். ஆனால்,  டீசல் இன்ஜின் என்றால், கதையே வேறு. ‘ஹோண்டாவின் டீசல் இன்ஜின்கள் அதிக சத்தம் போடும். காரைக் கிளப்பியதும் ஆரம்ப பெர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்கும் என்றாலும், வேகம் எடுக்க எடுக்க டல் அடிக்கும்...’ இப்படி ஹோண்டா டீசல் இன்ஜின்கள் பற்றிப் பரவலாக ஒரு கருத்து உண்டு. அதனால், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஹோண்டா CR-V காரை எடுக்கும் போது, எனக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick