நீயா நானா? சாம்பியன் கோப்பை யாருக்கு?

ரேஸ் - இருங்காட்டுக்கோட்டைதமிழ் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

மூன்றாவது முறையாக மாதம் 3 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனைசெய்து சாதனை படைத்திருக்கிறது ஹோண்டா. ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவை நிமிரவைப்பது ஆக்டிவா என்றால், ரேஸிங்கில் ஹோண்டாவை நிமிரச் செய்வது, ராஜிவ் சேது. இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கிலும் முழுக்க முழுக்க இப்போது ஹோண்டாவின் ராஜ்யம்தான். ஆம்! ஹோண்டாவின் Ten10 அகாடமியைச் சேர்ந்த ராஜீவ் சேதுவும் மதனா குமாரும்தான், சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். ராஜிவ் சேது 122 புள்ளிகள், மதனா குமார் 109 புள்ளிகள்.

இந்த மாதம் சென்னையில் நடந்த ரவுண்ட்-4 ரேஸ், மோட்டோ ஜீபி சீஸன் போல் ரொம்பப் பரபரப்பாக இருந்தது.  முதல் நாள் நடந்த ரேஸில், வெயிலும் மழையும் மாறி மாறி வந்து ரைடர்களைக் குழப்பியடித்தது. மழையைச் சபிக்கவும் முடியாமல், தப்பிக்கவும் முடியாமல் ரைடர்கள் தத்தளித்தனர். அடுத்த நாள், நல்ல வெயில். எனவே ட்ராக்குடன் ரேஸும் சூடு பிடித்தது. வழக்கமாக நடந்த குவாலிஃபையிங் ரேஸ் போல் இல்லாமல், சொல்லியடித்தார்கள் ரைடர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick